எரிபொருள் விநியோகத்திற்கான கியூ ஆர் முறை நீக்கம்
நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ளும் கியூ ஆர் அடிப்படையிலான முறை நிறுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர அறிவித்துள்ளார்.
குறித்த திட்டமானது இன்று(01.09.2023) முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
கியூ ஆர் முறைமை
கடந்த ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் எரிபொருளுக்கான தட்டுப்பாடுகள் அதிகம் நிலவியிருந்தது.
இதற்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த கியூ ஆர் முறைமை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது.
மேலும் நாட்டில் எரிபொருளின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Ministry of Power & Energy has set the maximum retail price for fuel for the month of September as of midnight yesterday. There has been significant increases in the Platts prices over the last 3 months. Platts prices have increased from USD $80-85 per barrel average in May &… pic.twitter.com/YWTZGuIOvW
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 1, 2023
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




