வெளியான அமெரிக்க தேர்தல் முடிவுகள்: ஹரிஸிடம் இருந்து ட்ரம்ப்பிற்கு சென்ற தொலைபேசி அழைப்பு
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், தேர்தல் வேட்பாளர்களான கமலா ஹரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, தேர்தலில் வெற்றிபெற்ற டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த கமலா ஹரிஸ், நாட்டினை ஒருங்கிணைக்கும் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தேர்தல் களத்தில் கமலா ஹரிஸின் துணிவு, தொழில்முறை மற்றும் உறுதி ஆகியவை பாராட்டுக்குரியது என ட்ரம்ப் தரப்பு அறிக்கை மூலம் வெளிப்படுத்தியுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப்
தேர்தல் பிரசாரங்களின் போது, கமலா ஹரிஸை பொய் கூறுபவராக ட்ரம்ப் சித்தரித்திருந்தமையும் ட்ரம்ப்பை பாசிசவாதியாக ஹரிஸ் சித்தரித்திருந்தார்.
நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |