மீண்டும் தேர்தலில் களமிறங்கும் கமலா ஹாரீஸ்! சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜோ பைடன்
அடுத்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் நான் போட்டியிட்டால் கமலா ஹாரீஸ் தான் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் பதவி வகித்து வருகின்றார். இவர் சமீப காலமாக ஓரங்கட்டப்படுவதாக செய்திகள் பரவி வரும் நிலையில்,வதந்திக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இவ்வாறு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அடுத்த அமெரிக்க தேர்தலில் நான் போட்டியிட்டால் கமலா ஹாரீஸ் துணை அதிபர் வேட்பாளர் என்றும் அவர் மிகவும் சிறப்பான முறையில் பணியாற்றி வருவதாகவும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபர் வேட்பாளராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.