பதவியில் இருந்து நீக்கப்படும் கமல் குணரத்ன
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் கமல் குணரத்னவை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
போராட்டகாரர்களை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு
போராட்டம் நடைபெற்ற காலத்தில் போராட்டகாரர்கள் ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் உட்பட அரசின் உயர்மட்ட இடங்களுக்குள் புகுந்தனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு தரப்பினர் ஊடாக இதனை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் மஹேஷ் சேனாநாயக்க
இதன் காரணமாக கமல் குணரத்னவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ஓய்வுபெற்ற இராணுவ தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஆலோசரான ருவான் விஜேவர்தனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
