கோவிட் அச்சுறுத்தல் காரணமாக களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம் மூடல்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் 12 பேருக்கு கோவிட்தொற்று இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து பிரதேச செயலகம் மூடப்பட்டுள்ளது.
நேற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 60க்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 12 உத்தியோகத்தர்கள் கோவிட்தொற்றுக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று முதல் தற்காலிகமாகப் பொதுமக்களுக்கான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தில் 12பேர் கோவிட்தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டமையானது குறித்த பிரதேசத்தில் எல்லை மீறிச்செல்லும் நிலைமையினை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய தொற்று நோயியலாளர் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள தொற்றானது கடந்த தொற்றுக்களை விட வீரியம் கூடியதாகவும் இளம்
வயதினரை அதிகளவில் தாக்கும் நிலை காணப்படுவதனால் வெளியில் செல்வதைத்
தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 8 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
