நீண்டகாலத்திற்கு பின் புனருத்தாரணம் செய்யப்படவுள்ள களுவாஞ்சிகுடி தபால் காரியாலயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி தபால் காரியாலயம் கடந்த யுத்த காலத்திலிருந்து முற்றாகப் பாதிப்புற்ற நிலையில் பழுதடைந்து காணப்படுகின்றது.
இதனை புனருத்தாரணம் செய்து மக்கள் பாவனைக்கு விடவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மிக நீண்டகாலமாகவிருந்து வேண்டுகோள் விடுத்து வந்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று (18.09.2025) சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாக கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்தார்.
நீண்ட கால கோரிக்கை
29.5 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் களுவாஞ்சிகுடி தபால் காரியாலயம் புதிதாக நிருமானிக்கப்படவுள்ளது. இக்காரியாலயம் நீண்டகாலமாக பழுதடைந்துள்ளதனால் களுவாஞ்சிகுடி தபாலக நடவடிக்கைகள் வாடகை கட்டிடத்திலேயே தற்போது வரைக்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமது கிராமத்தில் மிக நீண்டகாலமாவிருந்து யுத்ததில் பாதிப்புற்ற நிலையில் இதுவரையில் புனரமைக்கப்படாமல் காணப்படும் தபால் காரியாலயத்தை புனரமைப்புச் செய்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கைக்கு இணங்க இன்றயத்தினம் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிரதம அதிதியாகக கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெந்தலால் ரத்னசேகரன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், பிரதி அஞ்சல் மா அதிபர் உசித்த உலங்கமே, கிழக்கு மாகாண தபால் மா அதிபர் சி.பிரகாஷ், மற்றும், அரச உயர் அதிகாரிகள், தபால் நிணைக்கள அதிகாரிகள், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.







மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam