மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! விசாரணையில் சிக்கிய முக்கிய ஆதாரம்
மர்மமான முறையில் உயிரிழந்த களுத்துறை பாடசாலை மாணவியின் சடலம் சட்ட வைத்தியரிடம் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாணவியின் உடல் உறுப்புகள் அரச ரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தங்குமிடமொன்றுக்கு அருகில் புகையிரத பாதை பகுதியிலிருந்து 16 வயது பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

முக்கிய ஆதாரம்
இவ்வாறு உயிரிழந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோரால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் கூறுகையில்,
“இது மிகவும் பாரதூரமான நிலை, சட்ட அமலாக்கத்தால் மட்டுமே குழந்தைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படமாட்டாது. இந்த பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் உறவினர்களுக்கு பெரும் பொறுப்பு உள்ளது.

பெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
பெற்றோர்கள், பாதுகாவலர்கள் குறிப்பாக இளம் பெண்களுடன் உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எந்த வகையான நபர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள் என்பது குறித்து கவனமாக இருந்தால் இதுபோன்ற துயர சம்பவங்களை தவிர்க்கலாம்.
துஷ்பிரயோகம் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்க முடியும் எனவும், பொலிஸ் அவசர இலக்கமான 119க்கு அழைப்பதன் மூலமும் தகவல் வழங்க முடியும் எனவும் உதயகுமார அமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 24 மணி நேர தொலைபேசி இலக்கமான 1929 க்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 2 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan