உயிரிழந்த மாணவியின் மர்மத்தை கடலில் தேடும் பொலிஸார்
களுத்துறை தங்கும் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் கையடக்கத் தொலைபேசியை சந்தேக நபர் கடலில் வீசி எறிந்துள்ளார்.
இதையடுத்து, அதனைக் கண்டுபிடிக்க கடற்படையின் நீர்மூழ்கிக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டதாக களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மாணவியுடன் சென்ற இளம் ஜோடியிடம் மேற்கொண்ட விசாரணையின் போதே உயிரிழந்த மாணவியின் கையடக்கத் தொலைபேசி கடலில் வீசப்பட்டது தெரியவந்தது.

கையடக்கத் தொலைபேசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கை
மேலும் பல முக்கிய தகவல்கள் அந்த கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து வெளிவரலாம் என்பதாலேயே அந்த மாணவியின் காதலன் என்று கூறப்படும் நபர் கையடக்கத் தொலைபேசியை கடலில் வீசியுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும், சம்பந்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்தால் அவரது தொலைபேசி தொடர்பில் ஒரு அறிக்கை கோரப்பட்டுள்ளது.
தொலைபேசியின் உரையாடல் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வது மிகவும் இலகுவான விடயம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        