தமிழ் நாட்டுக் கடலில் கவிழ்ந்த இலங்கை படகை மீட்ட இந்திய கடற்றொழிலாளர்கள்
கடலில் கவிழ்ந்து மிதந்து கொண்டிருந்த இலங்கை படகை ஒன்றை தமிழகம், தூத்துக்குடி- பெரியதலை கடற்றொழிலாளர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
நேற்று(7) வெள்ளிக்கிழமை மாலை கரைக்குத் திரும்பும் போது, பெரியதலை கடற்கரையிலிருந்து ஏழு கடல் மைல் தொலைவில், தலைகீழாக மிதந்த இந்த ஃபைபர் படகை கடற்றொழிலாளர்கள் கண்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
படகு இலங்கையைச் சேர்ந்தது என்பதைக் கண்டறிந்த நிலையில், கடலில் சுற்றியுள்ள பகுதியில் தேடினர், ஆனால் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் படகை கரைக்கு இழுத்துச் சென்றனர் தகவல் கிடைத்ததும், கரையோர பொலிஸ் அதிகாரி பேச்சிமுத்து தலைமையிலான குழு சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளது.
இதன்போது, படகு இலங்கையின் கல்பிட்டியைச் சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், படகு கடல் நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்பட்டதா, கடற்றொழிலில் ஈடுபடும்போது கவிழ்ந்ததா அல்லது வேறு எவராலும் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
