கல்முனை பாடசாலையொன்றின் கட்டிடம் திறந்து வைப்பு
கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தின் பூரணப்படுத்தப்பட்ட இரண்டாம் மாடி கட்டிடம் உத்தியோகபூர்வமாக நேற்று (14) மாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சமூக சேவகரும் இளம் தொழிலதிபருமான செல்லத்துரை முஹமட் றிப்னாஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு ரூபா 80 இலட்சத்திற்கும் அதிகமான தனது தனிப்பட்ட செலவில் நான்கு வகுப்பறைகளை கொண்டமைந்த புதிதாக பூரணப்படுத்தப்பட்ட இரண்டாம் மாடி கட்டிடத்தை ஏனைய அதிதிகளுடன் இணைந்து திறந்து வைத்தார்.
நினைவுச்சின்னம்
குறித்த நிகழ்வானது கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம். எச். எஸ். ஆர். மஜீதிய்யா (எல்.எல்.பி) தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பிரதம அதிதி கௌரவ அதிதிகளின் உரைகள் இடம்பெற்றன.
தொடர்ந்து பிரதம அதிதி மற்றும் ஏனைய அதிதிகளால் பாடசாலை அதிபருக்கு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதம அதிதிக்கு ஏனையவர்களால் பொன்னாடை போர்த்தப்பட்டு நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் நிகழ்வில் இப்பாடசாலையின் ஓய்வு நிலை அதிபர்களான எம்.ரி.ஏ.அஸீஸ் மற்றும் ஏ.எல்.அப்துல் கமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.