கல்முனை பிரதான வீதியில் பாரிய விபத்து இருவர் படுகாயம்! இருவர் தப்பியோட்டம்
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் இன்றிரவு இடம்பெற்ற பாரிய வீதி விபத்து சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து, கல்முனை நோக்கிச் சென்ற வாகனமொன்று கல்லடி சாந்தி படமாளிகைக்கு முன்னால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாதை மாறி கல்முனை திசையிலிருந்து மட்டக்களப்பு பக்கமாக எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதிய போதே இப்பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணத்தவர் படுகாயமடைந்த நிலையிலும், காரில் பயணித்த மற்றொருவரும் படுகாயமடைந்த நிலையிலுமாக, இருவரும் வைத்தியசாலை அதிதீவர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




