கஜ்ஜாவின் மகனிடம் சீ.ஐ.டி விசாரணை
,இந்த ஆண்டு ஆரம்பத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த கஜ்ஜா எனப்படும் அனுர விதானகமகேவின் மகன் இந்துவர விதானகமகேயிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்துவரவிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வசீம் தாஜுடீனின் மரணம் தொடர்பான விசாரணையில் புதிய முன்னேற்றமாக இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.
முன்பு, வசீம் தாஜுடீன் மரணம் ஏற்பட்ட இரவில், அவரது வாகனத்துக்கு பின்னால் சந்தேகத்திற்கிடமான ஒரு ஜீப் வாகனத்தில் அனுர விதானகமகே பயணம் செய்ததாக அவரது மனைவி குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
அதன்பின், அனுர விதானகமகேவின் மகன் ஊடக சந்திப்பொன்றில் தோன்றி தன் தாயின் அந்த வாக்குமூலத்தை மறுத்திருந்தார்.
தந்தையின் குடும்பத்தினரிடம் அந்த வீடியோவை காட்டியபோது அதுகுறித்து விசாரணை ஏன் நடக்கவில்லை என காவல்துறையிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதேவேளை, , வசீம் தாஜுடீன் மரணம் நிகழ்வதற்கு முன், அவரது வாகனத்திற்கு பின்னால் சென்ற ஜீப் வாகனத்தில் அனுர விதானகமகே — கஜ்ஜா” — பயணித்தது விசாரணைகளால் உறுதிப்படுத்தப்பட்டதாக கடந்த 4ம் திகதி, குற்றப் புலனாய்வு பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களம், அருண விதானகமகேவின் மகன் இந்துவர விதானகமகேயிடமிருந்து வாக்குமூலம் பெற தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.



