"ஈழத்தை புலிகள் அழிக்கவில்லை” கஜேந்திரன் ஆவேசம்(Video)
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு மட்டுமே இந்த இராணுவமும் பொலிஸாரும் துணை போகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.தையிட்டியில் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், இந்த நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் உலகத்திடம் இருந்து பெறப்படுகின்ற நிதியில், இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு சம்பளம், சீருடை, சாப்பாடு மற்றும் வாகனம் என வழங்கப்படும் அனைத்தும் தமிழர்களை ஒடுக்குவதற்காக பயன்படுத்தபடுகின்றன.
இந்த பிராந்தியம் 2009 வரை விடுதலைப் புலிகள் ஆதிக்கம் செலுத்திய பிராந்தியமாகவே இருந்தது.
1995 முதல் 2009 வரை இந்த யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. எங்கும் எதையும் செய்ய கூடிய வல்லமையுடையவர்களாக அவர்கள் இருந்தார்கள்.” என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்த முழுமையான கருத்துக்களை இந்த காணொளியில் காணலாம்,