குறுக்கே வந்த காட்டு மானால் விபத்திற்குள்ளான பேருந்து : திருகோணமலையில் சம்பவம்
கந்தளாய் – அக்போபுர பொலிஸ் நிலையத்திற்கு அண்மித்த பகுதியில் சிறிய ரக பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து, இன்று(19) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்ஓயா பகுதியிலிருந்து கோழிப் பண்ணை ஊழியர்களை ஏற்றிச் செல்வதற்காக ஜெயந்திபுர நோக்கி பயணித்த பொழுதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
அக்போபுர பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் பேருந்து சென்றுகொண்டிருந்த போது, திடீரென காட்டு மான் ஒன்று குறுக்காக பாய்ந்துள்ளது.

இதன்போது, மானை மோதாமல் தவிர்க்க முயன்ற சாரதி, பேருந்தை திருப்பிய போது அது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அங்கிருந்த கடையின் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும், விபத்தின்போது பேருந்தின் உள்ளே உரிமையாளரும் சாரதியும் மட்டுமே இருந்ததாகவும், இருவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri