“எந்த அடிப்படையில் ஓமானுக்கு மன்னார் வளைக்குடாவில் இரண்டு பகுதிகள் வழங்கப்படுகின்றன”
எவ்வித விலை மனுக்களையும் கோராது, மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வள ஆராய்ச்சிக்காக இரு பகுதிகளை ஓமானுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் (Kabir Hashim) கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் எந்த அடிப்படையில் அரசாங்கம் இதனை செய்கிறது எனவும் அவர் வினவியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கமே வெளியிடும் பத்திரிகையின் தலைப்புச் செய்தியை பாருங்கள். ஓமானுக்கு மன்னார் வளைக்குடாவில் இரண்டு பகுதிகள்.
3.5 பில்லியன் டொலரை கடனாக பெற்றுக் கொள்ள உதய கம்மன்பில ஓமானுக்கு சென்றிருந்தார். இதற்கான இலஞ்சமாக ஓமான் நாட்டுக்கு எண்ணெய் வள ஆராய்ச்சிக்காக மன்னார் வளைக்குடாவில் இரண்டு பகுதிகள் வழங்கப்படுகிறதா?.
விலை மனுக்களை கோராமல் ஏன் வழங்கப்படுகிறது. எந்த அடிப்படையில் மன்னார் வளைக்குடாவில் ஓமானுக்கு இரண்டு பகுதிகள் வழங்கப்படுகின்றன?.
கடனை பெறுவதற்காக நாட்டின் சிறந்த வளங்களை வெளிநாடுகளுக்கு எழுதிக் கொடுப்பதா?. யார் இவற்றுக்கு அனுமதி வழங்கியது?.
இதனை நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்தினீர்களா?. அனுமதி பெறப்பட்டதா எனவும் கோரியுள்ளார்.
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri