அரசாங்கம், கலீலியோ கலீலியின் ”முட்டாளா”? அல்லது ”குற்றவாளியா”? கபீர் ஹாசிம்
சா்வதேச முதலீடு உட்பட்ட பல விடயங்கள் அரசாங்கத்தின் பாதீட்டில் இடம்பெறவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினா் கபீா் ஹாசிம் தொிவித்துள்ளாா்.
நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ள 2022க்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு விவாதத்தின்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா்.
நாடு இன்று இந்தளவு பிரச்சனைக்கு பொறுப்புக்கூறவேண்டியவா், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே என்றும் அவா் தொிவித்துள்ளாா்.
ஆட்சிக்கான வந்த பின்னர், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, மேற்கொண்ட வாிச்சலுகைக் காரணமாக 600 கோடி ரூபா நட்டமேற்பட்டது.
இதன்மூலம் பெறப்பட்ட பணம், அரசாங்கத்தின் நெருங்கியவா்களுக்கு சென்றுள்ளது என்றும் கபீா் ஹாசிம் குறிப்பிட்டுள்ளாா்.
வெளிநாட்டு முதலீடுகள் என்று கூறி, அரசாங்கம், நாட்டின் சொத்துக்களை விற்பனை செய்வதாக அவா் சுட்டிக்காட்டியுள்ளாா்.
பருப்பு, அரிசி மற்றும் சீனி விலையை குறைக்கமுடியாது போனால் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை ஜனாதிபதியால், கட்டியெழுப்பமுடியும் என்றும் அவா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
நாடாளுமன்றத்தில் நேற்று சமா்ப்பித்த வரவுசெலவு திட்டம் அவரது முதலாவது வரவு செலவுத்திட்டம் என்று பசில் ராஜபக்ச கூறினாா்.
எனினும் அதுவே இந்த அரசாங்கத்தின் இறுதி வரவுசெலவுத்திட்டமாக இருக்கும் என்றும் கபீா் ஹாசிம் குறிப்பிட்டுள்ளாா்.
இந்தநிலையில் நாட்டில் மக்கள் இன்று எதிா்கொள்ளும் பிரச்சனைகளுக்கு வரவுசெலவுத்திட்டத்தில் தீா்வுகள் தரப்படவில்லை.
இதேவேளை கொரோனாவுக்கு ஏனைய நாடுகளைக் காட்டிலும் இலங்கை ஆகக்குறைந்த நிதியையே செலவிட்டுள்ளது.
மாலைத்தீவு தமது தலா வருமானத்தில் 6.9 வீதத்தையும், இந்திய தமது தலா வருமானத்தில் 3.5 வீதத்தையும், பாகிஸ்தான் 2 வீதத்தையும் செலவிட்டுள்ளன.
எனினும் இலங்கை 0.8 வீதத்தையே செலவிட்டுள்ளதாக கபீா் ஹாசிம் சுட்டிக்காட்டியுள்ளாா்.
இதேவேளை ”உண்மையை தெரிந்துக்கொள்ளாமல் அது உண்மையில்லை என்று கூறினால் அவன் முட்டாள்” என்றும் ”உண்மையை தொிந்துகொண்டு அது உண்மையெல்லையென்று கூறினால் அவன் குற்றவாளியாவாா்” என்ற பல்துறை நிபுணா் கலீலியோ கலீலியின் கருத்தை கபீா் ஹாசிம் சுட்டிக்காட்டியுள்ளாா்.
இதி்ல் எதனை வேண்டுமானாலும் அரசாங்கம் தமக்குாியதாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

பதினாறாவது மே பதினெட்டு 2 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
