முல்லைத்தீவில் இடம்பெற்ற கபடி சுற்றுப்போட்டி
முல்லைத்தீவு - வன்னிவிளாங்குளம், அம்பாள்புரம் கிராமத்தின் முத்தமிழ் விளையாட்டு கழகத்தின் ஒழுங்குபடுத்தல்களுடன் கபடி சுற்றுப்போட்டியொன்று இடம்பெற்றுள்ளது.
புலம்பெயர் கனடா வாழ் தமிழர் ஒருவரின் முழுமையான நிதி அனுசரணை பங்களிப்புடன் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை ஆதரவுடன் பகல் இரவாக 10.02.2024, 11.2.2024 ஆம் திகதிகளில் இடம்பெற்றிருந்தது.
குறித்த கபடி சுற்றுப்போட்டியில் ஆண்கள் சார்பில் 1ஆம் இடத்தை முத்தமிழன் விளையாட்டு கழகமும் 2ஆம் இடம் யோகபுரம் விளையாட்டு கழகமும் பெற்றுள்கொண்டன.
வெற்றிக் கேடயங்கள் பண பரிசில்கள்
மேலும், பெண்கள் சார்பில், 1ஆம் இடத்தை பாலிநகர் ஸ்கைலாப் விளையாட்டு கழகமும், 2ஆம் இடத்தை முத்தமிழன் விளையாட்டுக் கழகமும் பெற்றிருந்தன.
அத்தோடு, வெற்றிபெற்ற கழகத்தினருக்கும் வீர வீராங்கனைகளுக்கும் வெற்றிக் கேடயங்களும் பண பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த போட்டியில் விளையாட்டு உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகத்தினர், வீர, வீராங்கனைகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |