தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண ஜோதிலிங்கம் விசேட அழைப்பு

Sri Lankan protests Sri Lanka SL Protest Sri Lanka Government NPP Government
By Kajinthan Feb 01, 2026 10:36 AM GMT
Report

அரசியல் கைதிகளின் விவகாரத்தை அடையாள ரீதியாக செய்யாமல், உலகம் தழுவிய ரீதியில் செய்ய வேண்டும். ஏனெனில் தேசிய இனப் பிரச்சினையை என்பது சாராம்சத்தில் உள்நாட்டு பிரச்சினை அல்ல. இதுவொரு சர்வதேச பிரச்சினை என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான ஜோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

நேற்று(31.01.2026) மாலை யாழில் நடைபெற்ற "நீதிக்கான சாட்சி" என்ற நூதன முறையிலான போராட்டத்தில் கலந்துகொண்டு நீதிக்கான சாட்சி உரைக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

உளவு இயந்திரம் மோதி பாடசாலை ஆசிரியர் உயிரிழப்பு

உளவு இயந்திரம் மோதி பாடசாலை ஆசிரியர் உயிரிழப்பு

சிறையில் இருப்பவர்களின் அவலம்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகளின் போல சொந்த நலனுக்காக சிறைகளுக்குள் சென்றவர்கள் அல்ல. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்தவர்கள் என்ற வகையிலேயே அவர்கள் இவ்வாறு சிறைவாசத்தை அனுபவிக்கின்றனர்.

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண ஜோதிலிங்கம் விசேட அழைப்பு | Jyothilingam Special Call Solution Ethnic Problem

அவர்கள் அரசியல் கைதிகள் என்பதை இந்த அரசை நாங்கள் முதலில் ஏற்க செய்ய வேண்டும். இந்த அரசாங்கம் மாத்திரம் அல்ல இதுவரை ஆட்சியில் இருந்த அனைத்து அரசாங்கங்களும் அரசியல் கைதிகள் என்று ஏற்காத நிலையே காணப்படுகிறது.

இந்த அரசாங்கத்தின் நீதி அமைச்சர் கூட ஒரு தடவை அரசியல் கைதி என்று எவரும் இல்லை என்று கூறியுள்ளார். இந்தக் கூற்றுக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

அரசியல் கைதிகளின் விவகாரம் என்பது தமிழ் மக்களின் பொது விவகாரம் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொண்டு அதனை தமிழ் மக்கள் பொறுப்பெடுக்க வேண்டும். 

தமிழ் அரசியல் தலைமைகள்

அரசியல் தலைமைகள் இதனை பொறுப்பெடுக்க வேண்டும். துரதிஷ்டவசமாக எங்களுடைய அரசியல் தலைமைகள் இதனை பேசுவதையே அதிகமாக நிறுத்திக் கொண்ட நிலை தான் காணப்படுகின்றது.

அவர்கள் நினைத்திருந்தால் வலிமையாக செயல்பட்டு இந்த அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்திருக்க முடியும். ஆனால் அவர்கள் அந்த முயற்சியை ஒரு வலுவானதாக செய்யவில்லை.

ஆகவே, அதற்காக நாங்கள் ஒரு அழுத்தத்தினை வழங்க வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இந்த அரசானது அச்சப்படுகின்ற ஒரே ஒரு விடயம் தமிழ் மக்களுடைய உலகளாவிய ரீதியிலான அரசியல் போராட்டம் தான்.

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண ஜோதிலிங்கம் விசேட அழைப்பு | Jyothilingam Special Call Solution Ethnic Problem

இதற்கு உதாரணம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி குறித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டமே. அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடாத்தியபோது தமிழ்நாட்டில் அது தொடர்பான போராட்டம் வளர்ந்தது. தமிழ்நாட்டில் இவ்வாறு வளர்ந்த போது புலம்பெயர் நாடுகளில் அந்த போராட்டம் வளர்ந்தது.

அன்று தமிழ்நாட்டில் தேர்தல் நடந்து கொண்டிருந்த ஒரு காலம். இதன்போது உடனடியாகவே இந்திய தூதுவர் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சவை அழைத்து இந்தப் போராட்டத்தை உடனடியாக நிறுத்துங்கள் என கூறியிருந்தார். ஏனென்றால் இது எங்களுக்கு பிரச்சினை என இந்திய தூதவர் கூறியிருந்தார்.

ஆகவே தமிழ் மக்களுடைய உலகளாவிய அரசியல் போராட்டத்திற்கு அரசு பயப்படுகின்றது.

விசேட அழைப்பு

காணிப் பிரச்சினையாக இருக்கலாம், அல்லது இன்று நடைபெறுகின்ற ஆக்கிரமிப்புகளாக இருக்கலாம், அரசியல் கைதிகளின் விடயமாக இருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டோருடைய விடயமாக இருக்கலாம் அனைத்துப் பிரச்சினைகளையும் உலகம் தழுவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

இவ்வாறு நாங்கள் உலகம் தழுவிய ரீதியில் நாங்கள் முன்னெடுப்பதாக இருந்தால் முதலில் தாயகத்தில் ஒரு கொதிநிலை வேண்டும். தாயகத்தில் கொதிநிலை உண்டானால் தான் தமிழகத்தில் கொதிநிலை உண்டாகும்.

தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண ஜோதிலிங்கம் விசேட அழைப்பு | Jyothilingam Special Call Solution Ethnic Problem

தமிழகத்தில் கொதிநிலை உண்டானால் தான் உலகம் தழுவிய ரீதியில் கொதிநிலை உண்டாகும். ஆகவே தாயகத்தில் ஒரு கொதிநிலையை எவ்வாறு நாங்கள் உண்டாக்குவது என்பதுதான் இங்கு விடயமாக காணப்படுகின்றது. இன்று தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அரசியல் கட்சி இல்லை. இருப்பதெல்லாம் தேர்தலில் போட்டியிடுகின்ற ஒரு குழு தான்.

அரசியல் கட்சி என்றாலே நாங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை பார்க்கின்றோம். இன்றைக்கு ஒரு அரசியல் கட்சி இல்லாத மக்கள் கூட்டமாக தான் நாங்கள் இருக்கின்றோம்.

இன்று எமக்கு அரசியல் கட்சி தேவை இல்லை. தமிழ் மக்களுடைய அனைத்து பிரச்சினைகளையும் உலகளாவிய ரீதியில் கையாளுகின்ற ஒரு அரசியல் இயக்கமே தேவைப்படுகின்றது.

அந்த அரசியல் இயக்கத்தை இன்று கட்டி எழுப்ப வேண்டிய ஒரு தேவையும் முக்கியத்துவமும் இன்று இருக்கின்றது என வலியுறுத்தியுள்ளார். 

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் தொடர்பில் வெளியான தகவல்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் தொடர்பில் வெளியான தகவல்

இன்றிரவு வரை 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு

இன்றிரவு வரை 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு

மரண அறிவித்தல்

சூராவத்தை, உயரப்புலம்

30 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இலுப்பைக்கடவை

01 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, Chigwell, United Kingdom

26 Jan, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, வெள்ளவத்தை

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, பூநகரி, அரியாலை, London, United Kingdom

01 Feb, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, India, Westerwald, Germany, London, United Kingdom

13 Jan, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, பரிஸ், France

12 Feb, 2006
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி, வவுனியா

30 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

03 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Zürich, Switzerland

02 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை தெற்கு, பிரான்ஸ், France

25 Jan, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Épinay-sur-Seine, France

29 Jan, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்

துணுக்காய், யாழ்ப்பாணம், Toronto, Canada

27 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கனடா, Canada

17 Jan, 2011
மரண அறிவித்தல்

Tellippalai, சென்னை, India

26 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் ஆண்டு நினைவஞ்சலி

வத்திராயன் வடக்கு வேம்படி, ஜேர்மனி, Germany, இத்தாலி, Italy

30 Jan, 1995
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Toronto, Canada

29 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Stouffville, Canada

24 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Zürich, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Basel, Switzerland

25 Jan, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, காரைநகர், Birmingham, United Kingdom, Croydon, United Kingdom

21 Jan, 2026
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், நோர்வே, Norway

16 Jan, 2011
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US