ஜே.வி.பியினருக்கு எதிராக வழக்கு தொடரப்படும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற சுற்று வட்ட பகுதியில் நேற்று நடத்திய ஆர்ப்பாட்டம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடத்தப்பட்டது என நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய அந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.
அதில் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடத்தப்பட்டுள்ளதாக வெலிகடை பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பீ. அறிக்கையில் கூறியுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
