யுகதெனவி மின் நிலைய உடன்படிக்கை பற்றிய முக்கிய தகவலை வெளியிட்ட ஜே.வி.பி
யுகதெனவி மின் உற்பத்தி நிலைய உடன்படிக்கை தொடர்பிலான புதிய தகவல் ஒன்றை ஜே.வி.பி அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் அமெரிக்க நிறுவனமொன்றுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது என ஜே.வி.பி.யின் சிரேஸ்ட உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போது ஒரே நபர் அரசாங்கத்தின் தரப்பு சாட்சியாகவும், அமெரிக்க நிறுவன தரப்பு சாட்சியாகவும் கையொப்பமிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே இந்த உடன்படிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மின்வலு அமைச்சின் முன்னாள் செயலாளர் எம்.எம்.சீ.பெர்டினான்டோ என்பரே இரண்டு தரப்பின் சார்பிலும் சாட்சியாளராக உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 8 மணி நேரம் முன்

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
