முச்சக்கரவண்டி உரிமையாளர் ஒருவருக்கு 750 ரூபா நட்டஈடு: பாதீடு குறித்து விஜித ஹேரத் தகவல்
2022ஆம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட பாதீடு, சம்பிரதாய பாதீடு மாத்திரமே என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாட்டின் பிரச்சினைக்கு கோவிட் காரணம் அல்ல என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அரிசி விலை உயர்ந்துள்ளமைக்கு கோவிட் தொற்று காரணம் அல்ல. அரிசி மாபியாக்களே இதற்கான காரணம். இதனை இராணுவ அதிகாரிகளை நியமித்தும் கூட கட்டுப்படுத்த முடியவில்லை.
ஜனாதிபதியின் பிழையான தீர்மானம் காரணமாக, அரசாங்கம் இன்று 6000 கோடி ரூபா நட்டமடைந்துள்ளது.
பாதீட்டின் படி இன்று செலவீனம் 5245 கோடி ரூபாவாக இருக்கின்ற போது, வருமானம் 2284 கோடி ரூபா மாத்திரமே.
கோவிட்டினால் பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளா்களுக்கு நட்டஈடு வழங்க பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் மூலம், முச்சக்கரவண்டி உரிமையாளர் ஒருவருக்கு 750 ரூபாவே நட்டஈடாக வழங்கப்படப் போகிறது.
இது எந்தளவு நிவாரணமாக அவர்களுக்கு அமையப் போகிறது. எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் பொய்யான தோற்றத்தைக் காட்டியுள்ளது.
நாட்டில் உற்பத்தி பொருளாதாரம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எனினும் அரசாங்கம் இன்னும் தயார் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அரசாங்க நிறுவனமான லிற்றோ எரிவாயு நிறுவனத்தின் தலைவரே, எரிவாயு விநியோகத்தில் முறைகேடு இடம்பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளமையை விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
