அநுர ஆட்சியுடன் இணைவது குறித்து தமிழரசுக் கட்சி பேச்சுவார்த்தை நடத்தலாம்: தேசிய மக்கள் சக்தி தரப்பில் தகவல்
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு எம்முடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தரப்புகள் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் ஆட்சியமைப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி, தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க முன்வந்தால் அது தொடர்பில் தங்கள் தரப்பு நிலைப்பாடு என்னவாக இருக்கும் என கேள்விக்கு எழுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்
இதற்கு பதில் அளிக்கும் போது லால்காந்த குறிப்பிடுகையில், “அவர்கள் (தமிழரசுக் கட்சியினர்) எம்முடன் கலந்துரையாடும் விடயங்கள் எவை என்பது பற்றி பரிசீலிக்க வேண்டும்.
அவற்றுக்கு நாம் இணங்குகின்றோமா அல்லது இல்லையா என்பது பற்றியும் கவனம் செலுத்தப்பட வேண்டும். எவர் வேண்டுமானாலும் எம்முடன் பேச்சு நடத்தலாம்.
ஆனால், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் எவை, மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அவை தடையாக உள்ளனவா, எமது கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றனவா என்பன உள்ளிட்ட விடயங்கள் ஆராய்ந்த பின்னரே அது தொடர்பில் முடிவெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |