சிறுமி அம்ஷிக்கு சபையில் வைத்து அரசாங்கத்திடம் நீதி கோரிய மனோ கணேசன்
டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெறும் பெற்றோரின் ஆர்ப்பாட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள பொலிஸார் தயாராகியுள்ள நிலையில் அதனை தடுத்து நிறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அரசியல் அழுத்தம்
மேலும், இந்த விடயம் தொடர்பில் தெரிவித்த அவர்,
“ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆயுதபோராளிளோ, கலககாரர்களோ அல்ல, அநீதியை தட்டிக்கேட்க வந்தவர்கள். மேலும் இந்த விடயம் தொடர்பில் அரசு ஒரு விசாரணைக்குழு ஒன்றை அமைத்து உடனடியாக விசாரிக்க வேண்டும்.
குறித்த மாணவி படித்த தனியார் கல்வி நிலையத்தின் நிறுவனர் உங்கள் கட்சி சார்ந்தவர், இதனால் தான் மக்களுக்கு சந்தேகம் வருகின்றது.” எனவே அரசியல் அழுத்தமில்லாத நீதியான விசாரணை வேண்டும்” என குறிப்பிட்டார்.
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam