இறுதி யுத்தத்தில் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கிய நீதி அமைச்சர்
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று(25.08.2026) இடம்பெற்றுள்ளது.
உதவித்தொகை வழங்கும் நிகழ்வு
காணாமல்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஏற்பாட்டில், 2009ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில் இரண்டு பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி, இரணைமடு, கனகாம்பிகைகுளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்ற நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார, குடும்பத்தினருடன் கலந்துரையாடி அவர்களின் தற்போதைய நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன், உதவித்தொகைக்கான காசோலைகளையும் வழங்கி வைத்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தற்போதைய அரசு மிகவும் கரிசனையுடன் செயற்பட்டு வருகின்றது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவுவதற்கு அரசு தயாராக இருக்கின்றது என்றும் நீதி அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்ட இணைப்பாளர் மருங்கன் மோகன் மற்றும் கிளிநொச்சி அபிவிருத்திக் குழு இணைப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
கெஹெல்பத்தரவின் கைப்பேசியில் நடிகைகள் - அரசியல்வாதிகளின் தகவல்கள்! ஆராயப்படும் பல வங்கிக் கணக்குகள் - வெளிவரும் பகீர் தகவல்கள்
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening