இலங்கை சுங்கத்திணைக்கள அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை - ஜூலி சங் பாராட்டு
இரண்டு பாரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளை முறியடித்த விமான நிலையம் மற்றும் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் உள்ள சுங்கத்திணைக்கள அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் எக்ஸ் தளத்தில், விமான நிலையத்தில் முதன்முறையாக கொக்கெயின் படிகம் கடத்தல் முயற்சியை தடுத்தமை உட்பட 17.5 கிலோ ஹஷிஷ் மற்றும் கொக்கெயின் மற்றும் தபால் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4.2 கிலோ சிந்தடிக் போதைப் பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.
இரு பாரிய மோசடிகள்
இதற்கு விமானநிலையம் மற்றும் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் உள்ள இலங்கை சுங்கத்திணைக்கள அதிகாரிகளுக்கு பாராட்டுக்கள்.
கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் மொத்த பெறுமதி 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
இந்த நடவடிகைகள், அமெரிக்கா நிதியளிக்கும் ஐக்கிய நாடுகளின் போதைப் பொருட்கள் மற்றும் குற்றத் தடுப்பு அலுவலகத்தின் பயணிகள் மற்றும் சரக்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் திறன் மேம்பாடு மற்றும் உபகரண ஆதரவு உட்பட வலுவான அமெரிக்க கூட்டாண்மை மூலம் காலப்போக்கில் உருவாக்கப்பட்ட இலங்கை அதிகாரிகளின் மேம்பட்ட திறன்கள் மற்றும் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன.
ஆசியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முக்கிய போக்குவரத்து மையமாக, சட்டவிரோத கடத்தலை எதிர்த்துப் போராட இலங்கைக்கு உதவுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.




