எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர்
தற்போதைய அரச பொருளாதாரக் கொள்கையினால் இலங்கைப் பிரஜைகள் பாரிய துன்பங்களுக்கு உள்ளாகி வருவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவை நேற்று (02.09.2023) காலை ஜூலி சங் சந்தித்திருந்தார்.
இதன்போதே குறித்த விடயத்தை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
வெளியிட்டுள்ள அறிக்கை
இதன்போது இருவரும் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவது குறித்தும் அவர் அமெரிக்க தூதுவருக்கு விளக்கமளித்தார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |