இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் எதிர்மறையான சமிக்ஞையை அனுப்புகிறது : ஜூலி சங்
சர்ச்சைக்குரிய இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை இலங்கை ஏற்றுக்கொண்டமையானது,சீர்திருத்தம் மற்றும் மீட்சியை நோக்கிய இலங்கையின் பாதையில் எதிர்மறையான சமிக்ஞையை அனுப்புகிறது என்று அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கூறியுள்ளார்.
இலங்கையின் வர்த்தக சூழலை மேம்படுத்தும் வகையில், இலங்கை அரசாங்கம் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அதேவேளையில், இந்த சீர்திருத்தங்களை 'தெளிவான முறையில்' தனது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்ச்சைக்குரிய இணையப் பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில், மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, 70 வீதத்துக்கும் அதிகமான இலங்கையர்கள் யோசனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அது பற்றி அறிந்திருக்கவில்லை என்று தூதுவர் தெரிவித்தார்.
முக்கிய உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டமூலத்தை "செயல்படுத்த முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளன.
எனவே 'நீடித்த, நடைமுறைப்படுத்தக்கூடிய மற்றும் புத்திசாலித்தனமான' சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கை எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்று தூதுவர் வலியுறுத்தினார்.
அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி
அண்மையில் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி குறித்து பேசிய தூதுவர் சங், "புதிய உயர் வெற் விகிதங்கள் சராசரி இலங்கையர்கள் மற்றும்; வணிகங்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்று குறிப்பிட்டார்.
எனினும்; வரிகளை உயர்த்துவது மாத்திரமல்லாமல், வரி ஓட்டைகளை நீக்குதல் மற்றும் அரசாங்கத்தின் திறமையின்மைகளை நிவர்த்தி செய்தல் முக்கியமானதாகும் என்று அமெரிக்க தூதுவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கம் சேகரிக்கக்கூடிய சுங்க வருவாயின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது வரி வருவாயின் சுமையை மக்களின் தோள்களில் மேலும் சுமத்துகிறது என்றும் தூதுவர் சங் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan
