ஹர்ஷ இலுக்பிட்டியவின் வழக்கில் இருந்து நீதியரசர் ஒருவர் விலகல்
குடிவரவு, குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கில் இருந்து நீதியரசர் ஒருவர் பதவி விலகியுள்ளார்.
இணையத்தளம் ஊடாக சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா வழங்கும் செயற்பாடு தொடர்பில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் காரணமாக ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
நீதியரசர்களான திலீப் நவாஸ், பிரியந்த பெர்னாண்டோ, சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கின் விசாரணையில் இருந்து விலகிக் கொள்வதாக நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
இதனையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் ஜுன் மாதம் 16ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |