தலைமன்னார் கடற்பரப்பில் கைதான 8 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு விளக்கமறியல்
இலங்கை கடற்பரப்பினுல் சட்ட விரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தை சேர்ந்த 8 கடற்றொழிலாளர்களையும் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவினை இன்று (27.08.2024) மன்னார் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இலங்கை கடற்பரப்பினுல் நேற்று (26) இரவு சட்ட விரோதமாக ஒரு விசைப் படகுடன் நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 8 கடற்றொழிலாளர்களையும் கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையிடம் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் தலைமன்னார் கடற்படையினர் கடற்றொழிலாளர்களிடம் முன்னெடுத்த விசாரணைகளை தொடர்ந்து இன்று (27) மதியம் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று (27) மாலை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை முன்னெடுத்த மன்னார் நீதவான் அவர்களை அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
