ஓய்வு பெறுகிறார் நீதிபதி இளஞ்செழியன்: தமிழ் மக்களின் மனதை கனக்கச் செய்துள்ள உரை
தனது தீர்ப்புக்களாலும், நேர்மையான போக்கினாலும் தமிழ் மக்களை தன் பக்கம் கவர்ந்து வைத்துள்ள நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஓய்வு பெறுகிறார்.
அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் ஓய்வு வழங்கப்பட்டமையானது பலரின் மனதிலும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விழா பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதி
இலங்கை நீதிபதிகளில் வெள்ளி விழா பூர்த்தி செய்த முதல் தமிழ் நீதிபதியாக நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் காணப்படுகிறார்.
05.02.1997 நீதிபதியாக நியமனம் பெற்று வவுனியாவில் தனது முதல் நியமனத்தை நீதவானாக ஆரம்பித்து 05.02.2022 அதே வவுனியாவில் மேல் நீதிமன்ற நீதிபதியாக 25 ஆண்டுகள் பூர்த்தி செய்த நீதிபதி என்ற பெருமை அவருக்கு உண்டு.
இந்த நிலையில் புரியாத புதிராக தனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்தமையும் மக்களின் மனங்களை கனக்கச் செய்துள்ளது.
ஓய்வு பெறும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை கௌரவிக்கும் நிகழ்வு கடந்த முதலாம் திகதி வவுனியாவில் இடம்பெற்றது.
முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நீதிச் சேவை
இதன்போது அவர் மேலும் கூறுகையில், 05.02.2025 இல் எனது 28 ஆண்டுகள் நீதிச்சேவை சேவைகள் முடிவுறுத்தப்படவுள்ளது. முதல் நிலை நீதிமன்ற நீதிபதியாக எனது நீதிச் சேவை முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதிகள் 90 பேர் இருக்கிறார்கள்.
அதில் முதலாவது இலக்கத்தில் நான் இருக்கின்றேன். 12.12.2024 இல் உயர் நீதிமன்ற தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து தடைகளும் விலக்கப்பட்டன. 12.01.2025 இல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து 4 நீதிபதிகள் உயர் நீதிமன்றத்திற்காக பதவி உயர்த்தப்பட்டார்கள்.
மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் 4 வெற்றிடங்கள் உள்ளன. 12.01.2025 இல் இருந்து அதற்கு தகைமையானவன் நான். நான் தகைமையாலும், இலக்கம் 1 இல் இருப்பதாலும் நான் தகுதியானவன். எனது பிறந்த தினம் 20.01 ஆகும். மேல் நீதிமன்றம் 61 வயதை அடையும் போது முதல்நிலை நீதின்றம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
காலத்தின் சோதனை, முடிவு இறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கூறுகிறார்கள். இறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார்கள். 28 ஆண்டுகள் கடமை புரிந்தேன். புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என்ற ஆதங்கமானது மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |