ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த ஜே.ஆரின் பேரன்
இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவின் (J.R. Jayawardena) பேரனான பிரதீப் ஜயவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துக் கொண்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு (Sajith Premadasa) ஆதரவு வழங்கும் நோக்கில் அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் (SJB) இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பிரதீப் ஜயவர்தனவுக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரவேசம்
முன்னதாக, 2015ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) ஊடாக கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் பிரவேசித்த பிரதீப் ஜயவர்தன, 2017இல் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவானார்.
அதன்படி, இவர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும், மத்திய குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





மாதனமுத்தாக்களின் சோம்பேறிப் போராட்டமும் ஈழத் தமிழ் அரசியலும் 37 நிமிடங்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
