இலங்கையில் Joy Rides திட்டம் ஆரம்பம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டக்களப்பு விமான நிலையத்தில் Joy Rides திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. Joy Rides, விமான நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் குறுகிய தூர விமானமாகும்.
கடந்த வாரம், மூன்று விமானங்களில் இருந்து 36 பயணிகள் சுற்றுப்பயணத்தில் இணைந்துகொண்டதுடன், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வான் பரப்பில் சுமார் அரை மணி நேரம் பயணம் செய்தனர்.
மட்டக்களப்பு விமான நிலையத்தை உள்நாட்டு விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான முதல் படியாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் எதிர்காலத்தில் இரத்மலானை மற்றும் யாழ்ப்பாணம் விமான நிலையங்களுக்கு அருகில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri