சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை

Tamils Karuna Amman United Kingdom China World
By T.Thibaharan Mar 30, 2025 11:32 AM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report

இலங்கையின் படைத்துறை சார்ந்த நான்கு யுத்தக் குற்றவாளிகள் மீது பிரித்தானிய அரசு தடை விதிப்பு என்றவுடன் பிரித்தானியா அரசு தனது இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையை மாற்றிவிட்டது என்று அர்த்தப்படக்கூடாது.

ஆயினும் இந்த தடையானது இலங்கை அரசின் மேற்குலகம் சார்ந்த ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு ஒரு தோல்வியாகவும், தமிழ் மக்களுடைய சர்வதேச அரசியல் நடவடிக்கைகளில் ஒரு மைல்கல்லாகவும் அமைந்துள்ளது என்பது உண்மைதான்.

இத்தகைய ஈழத் தமிழரின் சர்வதேச அரசியல் நகர்வு மற்றும் சர்வதேச உறவு முறைமை எத்தகையது என்பது பற்றி சற்று பார்த்து விடுவோம்.

யாழ். மத்தியபேருந்து நிலையத்தை அழகு படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

யாழ். மத்தியபேருந்து நிலையத்தை அழகு படுத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

சர்வதேச உறவுகள்

நாடுகளை நாடுகளால் கையாள்வதற்கு பெயர் தான் சர்வதேச உறவுகள்(International relations). சர்வதேசம்(International) என்ற ஒரு வெறும் வார்த்தை சர்வதேச அரசியல்(International Politics) ஆகிவிடாது. சர்வதேசமாக காணப்படும் 196 நாடுகள் அனைத்தையும் எமது தேவை கேட்டவாறு எந்த நாட்டை அணி சேர்த்து, எந்த நாட்டை ஓரம் கட்டி, எந்த நாட்டு கையாண்டு, எந்த நாட்டை பயன்படுத்தி, எமக்கான வெற்றியை ஈட்டுவது என்பதுதான் சர்வதேச உறவுகள் ஆகும்.

சர்வதேசம் என்பது ஒரு புனிதப்பதம் கிடையாது. அது நாடுகளை அணிகளாக வகுத்து தனது தேவைக்கு ஏற்றவாறு கையாளுகின்ற வித்தைகள் மூலமே சர்வதேச உறவுகள் என்ற பரிமாணத்தை அடைய முடிகிறது. அதாவது சர்வதேசம் என்பது ஒரு நீதிமானாக, கற்பகதருவாய், ஒரு காமதேனுவாய் கேட்கும் வரமெல்லாம் தரவல்ல ஒன்று அல்ல.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை | Journey Of Eelam Tamils In International Politics

அது பரஸ்பர நலன்களின் அமைவிடம். சர்வதேச உறவில் நல்லதும் கெட்டதும் கொண்ட, கொலையும் கொள்ளையும் நிறைந்த, சூதும் வாதம் மிக்க, தீட்டும் துடக்கும் உள்ள, எதிரும் புதிருமான, நட்பும் பகையும் நொதுமலும் கொண்ட, புகழ்ச்சியும், இகழ்ச்சியும், வஞ்சகமும், சூழ்ச்சியும், பொறாமையும், ஏற்றத்தாழ்வும் மேலாதிக்க அகங்காரமும் மிக்க, அவரவர் நலன்களை அடைவதற்கான எந்த நியாய தர்மங்களையும் புறந்தள்ளி சுய நலன்களின் ஒட்டுமொத்த வடிவமாக, இலகுவில் பகுத்தாய்ந்து விட முடியாத ஒரு வினோதமான கூட்டுக் கலவையைக் கொண்ட அரசியல் ஆடுகளமாகவே சர்வதேச அரசியல் முறைமை (International Political system) வடிவம் பெற்று இருக்கிறது.

இத்தகைய சர்வதேச ஆடுகளத்தில் சந்தர்ப்பத்தை சாதகமாக பயன்படுத்தி, அறிவியலை தந்திரமாக உபயோகித்து அந்த ஆடுகளத்தில் சாகச வித்தை காட்ட வல்லவர்கள் வெற்றி வாகை சூடுகின்றனர். ஒவ்வொரு நாட்டுக்கும் அவையவை சார்ந்த நிலையிலிருந்து அவற்றுக்குரிய வாய்ப்புகளும், நடைமுறைகளும், செய்முறை உத்திகளும் அவரவர் தகுதிக்கேற்ற பங்கையும், பாத்திரத்தையும் நிர்ணயம் செய்கின்றது.

ஈழத் தமிழர்களுடைய கோரிக்கைக்கு இணங்க யுத்த குற்றவாளிகளுக்கு பிரித்தானியாவில் முதற்கட்டமாக தடை விதித்து இருக்கிறது. என்பதற்காக பிரித்தானியா தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றி விட்டது என்று அர்த்தப்படக்கூடாது. அவ்வாறு பிரித்தானியா இலகுவில் இலங்கை சார்ந்த தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றி விடவும் முடியாது. பிரித்தானியாவை பொறுத்த அளவில் அரசுகளை பகைப்பதில்லை என்பதுவே இலங்கை சார்ந்த வெளியுறவுக் கொள்கையாக இருக்கிறது.

இதுவே பிரித்தானியாவின் குடியேற்ற வாதத்திற்கு உட்பட்ட 51 பொதுநலவாய நாடுகளையும் பகைக்காது தான் ஆளுமை செலுத்தக்கூடிய வெளியுறவுக் கொள்கையைத்தான் கொண்டுள்ளது. எனவே அரசுகளைப் பகைப்பதில்லை என்பது பிரித்தானிய அரசின் வெளியுறவு கொள்கை, இலங்கை அரசு பிரித்தானிய மற்றும் மேற்குலக அரசுகளின் நண்பன்.

ஆயினும் தமக்கு சாதகமற்ற அரசாங்கங்கள் இலங்கையில் உருவாகின்றபோது இலங்கைக்கு இருக்கின்ற நெருக்கடிகளுக்குள்ளால் அந்த அரசாங்கங்களை கவிழ்ப்பதற்கோ, அல்லது அவர்களை தமக்குச் சார்பான வழிக்கு கொண்டு வருவதற்கு மனித உரிமைகள் பற்றி பேசுவது, நிதி உதவிகளை வரையறை செய்வது, ஐ.எம்.எப் போன்ற சர்வதேச நிதி நிறுவனங்களை கொண்டு நிபந்தனைகளை விதிப்பது, வரி விதிப்பு ,வரிவிலக்குஊடாகவோகட்டுப்படுத்துவர். அதையும் விஞ்சிச் செல்கின்ற போது போர்க்குற்றம், மனிதவுரிமை மீறல், இனப்படுகொலை போன்ற விவரங்களை கையில் எடுத்து அழுத்தங்களை பிரயோகித்து அந்த குறிப்பிட்ட நாடுகளை தமது வழிக்கு கொண்டு வருவதுதான் நடைமுறையாக உள்ளது.

இவ்வாறு இலகுவில் புரியமுடியாத புதிராக வடிவம் பெற்று ஒரு அரசியல் உறவு முறமைக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் சர்வதேச அரசியல் சூழலில் அரசற்ற ஈழத் தமிழர்கள் தங்களுடைய விடுதலைக்கான போராட்டத்தில் சர்வதேச அரசுகளை கையாள்வது என்பதும், தமக்கு ஆதரவாக அவர்களை திரட்டுவது என்பதும் இலகுவில் அடையப்படக்கூடிய விடயம் அல்ல.

உலகளாவிய அரசியலில் அரசுக்கும் அரசுக்குமான உறவுகளே பலமானவை. அவ்வாறே ஐ.நா மன்றம் கூட அரசுகளுக்கான அமையவேயன்றி தேசிய இனங்களுக்கான அமையம் அல்ல. இன்றைய உலகில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இந்த பூமியில் நிலை பெற்றிருக்கின்ற போதும் 200க்கு குறைவான அரசுகள்தான் இறைமையை கொண்ட நாடுகளாக இந்தப் பூமியில் இருக்கின்றன.

முட்டையின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கக்கூடும்! வெளியான எச்சரிக்கை

முட்டையின் விலை 50 ரூபாயாக அதிகரிக்கக்கூடும்! வெளியான எச்சரிக்கை

சர்வதேச அரசியல்

ஆகவே அரசுக்கும் அரசுக்குமான உறவின் பலமும், அவர்களுக்கிடையிலான பரஸ்பர கூட்டுறவும், ஒத்துழைப்பும் பலமானதாகவும், இலகுவில் முறிக்கப்பட முடியாததாகவும் அமையும். இந்நிலையில் ஈழத் தமிழருடைய சர்வதேச அரசியல் என்பது அரசற்ற இனம் என்ற வகையிலும், அவர்களுடைய சனத்தொகை, பரம்பலால், தாயக நிலப்பரப்பின் அளவாலும் சிறியது என்ற அடிப்படையில் பாதகமான பக்கங்கள் இருந்தாலும் உலகளாவிய அரசியலில் தமிழர் தாயகத்தின் அமைவிடம் சார்ந்து அதை இந்து சமுத்திரத்தின் மத்திய பாகத்தில் அமைந்துள்ளது என்ற அடிப்படையில் தமிழர் தாயகத்திற்கான கேந்திரத் தன்மை மிக உயர்வாக இருப்பதுவே ஈழத் தமிழர் சர்வதேச அரசியலில் பங்கையும், பாத்திரத்தையும் வகிக்க உதவுகிறது.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை | Journey Of Eelam Tamils In International Politics

இந்த சாதகத் தன்மையே இன்றைய சர்வதேச அரசியலின் ஆளுகைப் போட்டியில் ஈழத் தமிழர் தமது பங்கையும் பாத்திரத்தையும் வகிக்கவும், தமக்கான நலன்களை அடைவதற்கான ஒரே ஒரு முதுசமாகவும் ஈழத்தமிழரின் பலமாகவும் அமைந்திருக்கிறது,இந்த நிலையில் தான் இன்றைய உலகளாவிய அரசியலில் ஒற்றை பொருளாதார மையத்தில் இரண்டு அரசியல் அதிகார மையங்கள் அல்லது அணிகள் தோன்றிவிட்ட நிலையில் ஈழத் தமிழர்களின் அமைவிடம் சார்ந்து என்றும் இல்லாத அளவுக்து தமிழர்தாயகம் முக்கியத்துவத்தை பெறத்தொடங்கி விட்டறிலையில் ஈழத்தமிழர் பிரச்சினை சர்வதேச முக்கியத்துவத்தை பெறத் தொடங்கிவிட்டது.

இத்தகைய பின்னணியில் இந்து சமுத்திரத்தின் ஆதிக்க வலுச் சமநிலையை பேணுவதற்கு இலங்கை தீவு உலகின் பலம் வாய்ந்த நாடுகளுக்கு அவசியமாகிறது. அதே நேரத்தில் இலங்கை தீவு அண்மைக்காலமாக சீனா தலைமையிலான அதிகாரம் மையத்தை நோக்கி நகர்வதனால் இலங்கை அரசின் மீது மேற்குலகம் சற்று கொதிப்படைந்தே உள்ளது.

இந்த மேற்குலக அணிக்குள்ளே தான் இந்தியாவும் உள்ளடங்குகிறது என்பதையும் கவனத்தில் கொள்க. ஆகவே இன்றைய இலங்கையின் அரசியலில் இடதுசாரிகள் அரசியல் அதிகாரத்தை பெற்றதன் விளைவு அது மேலும் சீன நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஆகவே இலங்கையை கட்டுப்படுத்தவும், அதற்கு கடிவாளம் இடவும் மேற்குலகத்திற்கு ஈழத்தமிழர்களுடைய பிரச்சனையை கையிலெடுத்து ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையை யுத்தக் குற்றம் என்ற வகுதிக்குள் எடுத்து இலங்கை அரசை கட்டுப்படுத்த மேற்குலகம் முனைகின்றது.

இதன் ஆரம்பமாக அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் ஏற்கனவே இலங்கையினுடைய இராணுவ முன்னாள் இராணுவ தளபதிக்கும் மற்றும் இராணுவ முக்கியஸ்தர்களுக்கும் யுத்தம் குற்றம் இழைத்தவர்கள் என்ற அடிப்படையில் தடை விதித்து இருக்கிறார்கள். அதன் தொடர்ச்சி தான் இப்போது அநுகுமார அரசும், என்.பி.பி அரசாங்கமும் மேற்குலகத்தின் பிடியை அறுத்துக் கொண்டு சீனாபக்கம் செல்கின்ற போது அவர்களுக்கு ஒரு மூக்கணாம் கயிறு கட்ட வேண்டிய தேவை மேற்குலகத்தவருக்கு எழுந்துள்ளது.

அதே நேரத்தில் இனப்படுகொலைக்கு உள்ளாகிய ஈழத் தமிழர்களுக்கு நீதிகோரி புலம் பெயர் தமிழர்கள் சர்வதேச அரசியல் பரப்பில் சக்திவாய்ந்த நாடுகளில் தமது அரசியல் வேலைத்திட்டங்களை சளைக்காது தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளனர். அந்த அடிப்படையில் இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை பிரித்தானிய அரசு, தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி பிரித்தானியாவிலுள்ள அரசியல் கட்சிகளுடன் இணைந்து புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், இளையோர்கள், ஊடகங்கள், ஊடகவியலாளர், அரசியல் செயற்பாட்டாளர் என பல்வேறுதரப்பட்ட தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களின் தொடர் செயற்பாடுகளும், போராட்டங்களும் இலங்கைக்கு எதிரான சர்வதேச பரிமாணம் ஒன்றை நோக்கி தள்ளினார்கள்.

ஆகவே மேற்குலகத்தவர்களுக்கு இலங்கையை கட்டுப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதே நேரத்தில் புலம்பெயர் தமிழர்களுக்கு இலங்கையை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த இரு தரப்பினருடைய தேவைகளும் சந்திக்கும் சந்திப்புள்ளியில் அதாவது புலம்பெயர் தமிழர்கள் உந்தித் தள்ளிய போர் குற்றவாளிகளை இப்போது மேற்குலகம் இழுக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது அவர்கள் உள்ளே இழுத்து அவர்களுக்கு கடிவாளம் இட்டிருக்கிறார்கள் என்று சொல்வதே பொருத்தமானது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

ஈழத் தமிழர்கள்

ஈழத் தமிழர் தள்ளியதை பிரித்தானியா இழுத்துக் குற்றவாளி கூடைக்குள்ளே வீழ்த்தியிருக்கிறார்கள் அவ்வளவுதான். இத்தகைய பின்னணியில் தான் இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை தளபதி வசந்த கர்ணங்கொட, இராணுவ தளபதி ஜெகத் ஜயசூரிய மற்றும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) ஆகியோர் மீது பிரித்தானியா 24 மார்ச் 2025 பயணத்தடை விதித்துத்துள்ளது.

இது பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழரின் தொடர் அரசியல் நகர்விற்கு கிடைத்த அறுவடை தான். யுத்த குற்றவாளிகள் மீது பிரித்தானியாவில் தடை விதிக்கப்படும் என்ற உத்தரவாதத்தினை பிரித்தானியாவின் முக்கிய அரசியல் கட்சிகளும் பிரமுகர்களும் ஈழத் தமிழர்களுக்கு வழங்கியிருந்தனர்.

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை | Journey Of Eelam Tamils In International Politics

எனினும் இந்த அந்த முடிவு ஒரு வருட காலமாக இழுத்தடிப்பைச் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இந்த இந்த இழுபறி நிலைக்கான காரணம் புவிசார அரசியல் என்றே பிரித்தானிய வெளியுறவுத்துறை சார்ந்தவர்கள் குறிப்பிட்டு இருக்கின்றனர். அடிப்படையில் இலங்கை தீவில் தனது புவிசார் அரசியலை நிர்ணயம் செய்கின்ற சக்தியாக இந்தியா இருக்கிறது என்பதை ஈழத் தமிழர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் பாதுகாப்பு வளையத்துக்குள் அமைந்துள்ள புள்ளியாகவே இலங்கை தீவு உள்ளது. எனவே இலங்கையில் ஏற்படுகின்ற எத்தகைய மாற்றங்களும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு சார்ந்த மாற்றங்களை ஏற்படுத்த வல்லது. எனவே இலங்கை அரசியலின் மாற்றங்களை இந்தியா கவனிக்கவும், கட்டுப்படுத்தவும், நிர்ணயம் செய்யவும் பின் நிற்கப் போவதில்லை.

இஸ்ரேலுக்கு எவ்வாறு அமெரிக்கா இருக்கிறதோ அவ்வாறு ஈழத் தமிழர்களுக்கு மேற்குலகத்தைக் காட்டிலும் இந்தியாவே அருகில் இருப்பதனாலும், எட்டுக்கோடி தமிழர்கள் இந்தியாவில் இருப்பதாலும் இந்தியாவின் அனுசரணை ஈழத் தமிழர்களுக்கு அவசியமானது. எனவே ஈழத் தமிழரின் நிர்ணய உரிமைக்கான போராட்டப் பாதையில் இந்தியாவை எமக்க சாதகமாக மாற்றி அமைக்க வேண்டியது தவிர்க்கப்பட முடியாத ஒரு நிபந்தனையாக, நியதியாக ஈழத் தமிழர் முன்னே உள்ளது என்பதையும் ஈழத் தமிழர் கருதிக் கொள்ள வேண்டும்.

இன்றைய உலக அரசியல் ஆதிக்க போட்டியில் புவிசார் அரசியல் முக்கிய நிர்ணய சக்தியாக உள்ளது. அது உக்ரைனாக இருக்கலாம், தாய்வானாக இருக்கலாம், பலஸ்தீனமாக இருக்கலாம், எமது தமிழீழமாக இருக்கலாம் புவிசார் அரசியல் நிபந்தனையையும், நிர்ணயத்தையும் நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்று அனுசரித்துத்தான் ஆக வேண்டும்.

இத்தகைய சர்வதேச அரசியல் நகர்வு விருப்பு வெறுப்புகளை தாண்டி ஈழத் தமிழுடைய சுயநிர்ணய உரிமை என்ற ஒரே இலக்குக்காக ஈழத் தமிழர்கள் ஒவ்வொரு நாடுகளையும் அந்தந்த நாடுகளின் இயல்புக்கும் நிலைமைக்கும், நடைமுறைக்கும் ஏற்ற வகையில் தனித்தனியான கொள்கைகளை வகுத்துவெற்றிக்கான மூலபாயத்தை வகுக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

ஆகவே கொள்கையும், நடைமுறையும் ஒவ்வொரு கோணத்தில் இருக்கின்ற போது நடைமுறைகளுக்கூடாக கொள்கையை மாற்றி அமைப்பதற்கான மூலோபாயங்களை முற்றிலும் அறிவியல் பூர்வமாக வகுத்து ஏற்பட வேண்டும்.

எனவே பிரித்தானிய வெளியுறவு கொள்கையை தமிழர்களுக்கு சார்பாக மாற்றுவதற்கு நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இப்போது இலங்கைக்கு எதிராக பிரித்தானியா எடுத்து வைத்த முதல் அடியை தமிழ் மக்கள் ஒரு படிக்கலாக பயன்படுத்தி சர்வதேச அரசியலில் மேல் நோக்கி ஏற வேண்டும்.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 30 March, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், மீசாலை

13 Nov, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

தாவடி, Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Markham, Canada

23 Oct, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நந்தாவில், கொக்குவில், Montreal, Canada

23 Oct, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, காரைநகர், நல்லூர், East York, Canada

17 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, வற்றாப்பளை, Ajax, Canada

18 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
100ம் ஆண்டு பிறந்தநாள்

யாழ். கரவெட்டி, இரணைப்பாலை

07 Jan, 2000
16ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

22 Oct, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு

01 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
அகாலமரணம்

கொக்குவில், Zürich, Switzerland

16 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, யாழ்ப்பாணம், Wassenberg, Germany, Markham, Canada

16 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US