யாழில் ஊடகவியலாளர்கள் போராட்டம்: கண்டுகொள்ளாமல் சென்ற ஊடகப் பிரதி அமைச்சர் - எழும் குற்றச்சாட்டு
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஊடகவியலாளர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் ஊடக பிரதி அமைச்சர் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்னவின் பங்கேற்புடன் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஊடக செயலமர்வொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
போராட்டக்காரர்களை கண்டுக் கொள்ளாத பிரதி அமைச்சர்
இந்நிலையில் அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஊடகவியலாளர்களின் படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களுக்கு சுயாதீன விசாரணை மற்றும் நீதி கோரி யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முன்பாக ஊடகவியலாளர்கள் நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களை கண்டுகொள்ளாமல் இரகசியமான முறையில் மற்றைய நுழைவாயிலால் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்த ஊடக பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன கருத்தமர்வில் பங்கேற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri