ஊடக அடையாள அட்டை இருந்தாலும் ஊடகவியலாளருக்கு நுழைவு தடை - பிரதேசசபை தவிசாளர் புதிய உத்தரவு
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபை அமர்வுக்கு செய்தி சேகரிப்பதற்காக வருமிடத்து, மாவட்ட ஊடக அமையத்தின் ஊடாக உறுதிப்படுத்தி முன் அனுமதி பெற்றாலே உள்ளே வர முடியும் என பிரதேசசபை தவிசாளர் சின்னராசா லோகேஸ்வரன் புதிய உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளார்.
அதன்படி இன்றைய தினம் பிரதேசசபை அமர்விற்கு செய்தி சேகரிக்க செல்வதாயின் இரண்டு நாட்களுக்கு முன்னரே அனுமதி பெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஊடகவியலாளர்களை திருப்பி அனுப்பிய தவிசாளர்
இதேபோன்ற காரணத்தால் கடந்த மாதம் (18.09.2025) நடைபெற்ற அமர்விலும் ஊடகவியலாளரை தவிசாளர் திருப்பியனுப்பியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து கரைதுறைப்பற்று பிரதேசசபை தவிசாளரால் ஊடகவியலாளருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில், “தாங்கள் ஊடகவியலாளர் என்கின்ற உறுதிப்படுத்தலை மாவட்ட ஊடக அமையத்தின் ஊடாக உறுதிப்படுத்தலுடன் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும்” என அனுப்பியிருந்தார்.
மாவட்ட ஊடக அமையத்தின் உறுதிப்படுத்தல் அவசியம்
ஊடகவியலாளர் அரசாங்க ஊடக அடையாள அட்டை வைத்திருந்த போதும், அதனை ஏற்க மறுத்து, மாவட்ட ஊடக அமையத்தின் உறுதிப்படுத்தல் அவசியம் என தவிசாளர் வலியுறுத்தியுள்ளார்.
இதனால் அரசாங்க அடையாள அட்டை இருந்தும் செய்தி சேகரிப்பதற்கு அனுமதி மறுக்கப்படுவது குறித்து ஊடக வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன.


மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
காயத்ரி விஷயத்தில் நிலா எடுத்த அதிரடி முடிவு, கடும் சோகத்தில் சோழன்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam