கிளிநொச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய ஊடகவியலாளரின் இறுதி ஊர்வலம் (Video)
கொழும்பு - தெகிவளையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் உயிரிழந்தாகக் கூறப்படும் ஊடகவியலாளர் நிபோஜனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேற்படி, விபத்தில் உயிரிழந்த நிபோஜனின் உடல் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் நேற்று (31-01-2023) பகல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான கிளிநொச்சி முரசுமோட்டைக்கு அஞ்சலிக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
பல தரப்பினரும் இரங்கல்
இன்று அதிகாலை முதல் ஊடகவியலாளர் நிபோஜனின் உடல், அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்றைய தினம் (01.02.2023) முற்பகல் 11 மணிக்கு முரசு மோட்டை ஐயன் கோயில் அடி இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலத்தில் ஊடகவியலாளர்கள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும், இவரது மரணத்துக்கு பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



