ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார மரணம்
சிஷே்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார மரணமடைந்துள்ளார். கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
71 வயதான பந்துல பத்மகுமார நீண்டகாலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்.
பந்துல புஷ்பகுமார, தொலைக்காட்சியில் முல் பிட்டுவ (முன்பக்கம்) என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தி வந்ததுடன் அவரது வாசிப்பு பாணி காரணமாக பிரலமானார்.அந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற லோக சிதியம (உலக வரைப்படம்) மிகவும் பிரபலமானது.
அவரது நிகழ்ச்சியை பின்பற்றியே பின்னாளில் ஏனைய தொலைக்காட்சிகள் பத்திரிகை வாசிப்பு நிகழ்ச்சியை ஆரம்பித்தன. 1970 ஆம் ஆண்டு ஊடக துறையினர் பிரசேித்த, பந்துல பத்மகுமார லேக் ஹவுஸ் அரச பத்திரிகை நிறுவனம் உட்பட முக்கிய பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
அதேவேளை மற்றுமொரு சிரேஷ்ட ஊடகவியலாளரான சுனில் மாதவ பிரேமதிலக்கவும் இன்று காலை மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
