இராணுவ சர்வாதிகார இலக்கை நோக்கி இந்த அரசு பயணிக்கிறது : சி.லோகேஸ்வரன்
ஊடகவியலாளரை தாக்கியமை இலங்கைத்தீவில் ஜனநாயகத்தின் மூலமாகிய ஊடக சுதந்திரத்தின் இருப்பை அதன் சுயாதீன தன்மையைப் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடுகையில்,
லங்காசிறி செய்தி நிறுவனத்தின் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் மீதே மூர்க்கத் தனமாக இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதல் இராணுவ சர்வாதிகார இலக்கை நோக்கி இந்த அரசு பயணிப்பதையே காட்டுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தைக் கண்டிப்பதோடு நீதி நிலைநாட்டப்படவேண்டும்.
மேலும் இதோ போன்ற சம்பவங்கள் தொடராதிருக்கச் சம்மந்தப்பட்டோர்கள் முயலவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
