கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் - ஜோசப் ஸ்டாலின்
கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாடசாலை ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள ஆன்லைன் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில்,
தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டமைக்காக போராட்டத்தை கைவிடத் தயாரில்லை. எங்களது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரையில் போராட்டங்கள் தொடரும்.
கல்வி அமைச்சினால் இணைய வழி கற்கை தொடர்பில் எவ்வித திட்டங்களும் கிடையாது. ஆசிரியர்கள் சொந்த செலவில் இணைய வழியில் கற்பித்து வருகின்றனர்.
இவ்வாறு கற்பிக்கப்பட்டாலும் இதன் மூலம் 40 வீதமான மாணவர்களே கற்கும் நிலையில், 60 வீதமான மாணவர்களுக்கு கற்க முடியாதுள்ளது.
இந்த மாணவர்களுக்கு கல்வியை வழங்க அரசாங்கத்திடம் எவ்வித திட்டங்களும் கிடையாது. அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு நீண்ட காலமாக தீர்வு வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
