மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட ஜோசப் பரராஜசிங்கத்தின் 18ஆவது நினைவு தினம்(Photos)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 18ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் நடத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று (25.12.2023) மாலை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே.சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இதன்போது ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
அணிவிக்கப்பட்ட மலர் மாலை
மலர் மாலையினை நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோபனன் ஆகியோர் அணிவித்துள்ளனர்.
மேலும் தமிழ் தேசிய அரசியலும் பெண்களும் என்னும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி புளோரிடா சிமியோன் நிகழ்வில் சிறப்புரையாற்றியுள்ளார்.
இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

£4.75 மில்லியன் மதிப்புள்ள 18 காரட் தங்க கழிப்பறை: துணிகர திருட்டின் சிசிடிவி காட்சிகள்! News Lankasri

5 நாள் முடிவில் வெற்றிப்பெற்றுள்ள டிராகன் திரைப்படம் செய்த வசூல்... தமிழகத்தில் மட்டுமே இவ்வளவா? Cineulagam

ட்ரம்ப் முன்வைத்த ஒப்பந்தத்துக்கு சம்மதித்தார் உக்ரைன் ஜனாதிபதி: விரைவில் கையெழுத்தாகலாம் News Lankasri
