பதவி விலகினார் பட்லர்!
சாம்பியன்ஸ் கிண்ண தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் தலைமை பதவியில் இருந்து ஜோஸ் பட்லர் விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெறும் போட்டியே அவரது தலைமையிலான கடைசி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சரியான முடிவு
2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் இயான் மோர்கன் தலைமை பொருப்பில் இருந்து விலகியதன் பின்னர் அந்த பதவியை ஏற்ற ஜோஸ் பட்லர், அதே ஆண்டு டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.
இது தொடர்பில் பட்லர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட்டின் தலைமை பதவியில் இருந்து விலகுகிறேன். இது எனக்கும் அணிக்கும் சரியான முடிவு என்று நம்புகிறேன்.
புதிய தலைவருடன் இணைந்து பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று நம்புகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்ப்பமாக இருக்கும் செய்தியை கியூட் போட்டோவுடன் அறிவித்த பாலிவுட் பிரபலங்கள் கியாரா அத்வானி, சித்தார்த்... குவியும் வாழ்த்து Cineulagam

3-வது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்று.., திருமணம் செய்துகொண்ட இரண்டு IAS அதிகாரிகளின் கதை News Lankasri
