மன்னாரில் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோத்தர்களின் பொதுக்கூட்டம்
மன்னாரில் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோத்தர்களுக்கான பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டமானது சங்க பொதுச்செயலாளர் தம்மிக்க முனசிங்க தலைமையில் மன்னார் நகர மண்டபத்தில் நேற்று(11) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழில் முறைப்பிரச்சினைகள் தொடர்பான ஒன்றுகூடல் நடைபெற்றது.
ஒன்றுகூடல்
இதில் பதவி நிலை அதிகாரிகள் அதிகார துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது, அரச உத்தியோகத்தர் என்ற வகையில் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் சமம் என்ற அடிப்படையில் இன்று அநுர அரசு சிறப்பாக செயற்படுகின்றது.
ஆகவே கிராம மட்ட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஐந்து வருடத்திற்கு ஒருமுறை இடமாற்றம் நடைமுறைப்படுத்த வேண்டும். முறை அற்ற இடமாற்றம் செய்ய கூடாது, பதில் கடமை கொடுப்பனவுகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு கிடைக்க வேண்டும்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கௌரவம் அந்தஸ்து முறையாக கொடுக்கப்படவேண்டும். மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பல தொழில் முறைப்பிரச்சனைகள் தீர்க்கபடுவது தொடர்பாக தம்மிக்க,மார்க்ஸ்பிரபா, மன்னார் மாவட்ட ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்க பொதுச்செயலாளர் விக்டர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் சிறப்பான ஒன்றுகூடல் நிகழ்வுகளை நடத்தினார்கள்.
அதில் அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்கள்.
இக்கூட்டத்தில் ஊடகவியலாளர்கள் உட்பட அனைவருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
