ஜனாதிபதியின் ஆதரவை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் - பெர்னாண்டோ
இலங்கையில் உள்ள 6.9 மில்லியன் மக்களின் ஆதரவு இன்னும் இருப்பதால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தனது இராஜினாமாவை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்த அவர், மக்கள் ஆணையை ஜனாதிபதி இன்னும் வைத்திருப்பதாக தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு இன்னும் மக்களின் ஆதரவு உள்ளது என்பதை நிரூபிக்க தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்படும் பொதுப் போராட்டங்கள் சிறு போராட்டங்களே எனத் தெரிவித்த அமைச்சர், எனினும் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.
உலக அரசியலில் பதற்றம்: ட்ரம்பின் நகர்வு சர்வாதிகாரமா..! அ. யோதிலிங்கம் 47 நிமிடங்கள் முன்
விருது விழாவில் பட்ட அவமானம்.. Bigg Boss 9 டைட்டில் ஜெயித்தபின் கண்கலங்கி பேசிய திவ்யா கணேஷ் Cineulagam