அமெரிக்காவில் முன்னணி நடிகர் நள்ளிரவில் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் முன்னணி ஹொலிவுட் நடிகரான ஜொனி வாக்டர் திருடர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
37 வயதான இவர் அமெரிக்காவில் வெளியான தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் பல திரைப்படங்களிலும் இவர் சிலவற்றிலும் ஜொனி வாக்டர் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை, லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தமது வீட்டில் ஜொனி வாக்டர் நள்ளிரவின்போது உறங்கிக் கொண்டிருந்தபோது, அதிகாலை 3 மணி அளவில் அவரது வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அவரது வாகனத்தில் இருந்த சில பாகங்களை திருட முயன்றுள்ளனர்.
இதனால் ஏற்பட்ட சத்தம் கேட்டு வெளியே வந்த ஜொனி வாக்டர் திருடர்களை பிடிப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அவருக்கும் திருடர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போதே திருடர்கள் தாங்கள் கொண்டு வந்த துப்பாக்கியால் ஜொனி வாக்டரை சுட்டுக் காயப்படுத்தினர். இதனையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜொனி வாக்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
