எதிர்ப்பை சமாளிக்க கட்சி உறுப்பினர்களுக்கு மதிய உணவளித்த ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்(Joe Biden) தனது பிரசாரத்தின் ஒரு பகுதியாக நேற்று(04) மூத்த ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களையும் பணியாளர்களையும் அமைதிப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த வாரம் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்புடனான(Donald Trump) அவரது தோல்வி கண்ட விவாதத்திற்குப் பின்னர் இந்த நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தல்
அத்துடன் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் வேட்பாளராக தமக்கு பதிலாக மாற்றப்படுவார் என்று ஊகிக்கப்பட்ட துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸூடன் மூடிய கதவு மதிய உணவு விருந்தை பைடன் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர் கருத்துரைத்த பைடன், தாம் தொடர்ந்தும் போட்டியில் இருப்பதை தெளிவுப்படுத்தினார் “நான் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர். யாரும் என்னை வெளியே தள்ளவில்லை. நான் வெளியேறவும் இல்லை” என்றும் பைடன் இதன்போது குறிப்பிட்டார்.
பைடன்-ஹாரிஸ் ஆகியோரின் இந்த கருத்துக்களுக்கு பின்னர் சில மணிநேரத்தில், அனுப்பப்பட்ட நிதி திரட்டும் மின்னஞ்சலிலும் பைடனின் இதே வாக்கியங்கள் கூறப்பட்டிருந்தன “என்னால் முடிந்தவரை தெளிவாகவும் எளிமையாகவும் கூறுகிறேன்.நான் போட்டியிடுகிறேன்;” “இறுதி வரை இந்த போட்டியில் இருக்கிறேன்;" என்று பைடன் அதில் குறிப்பிட்டிருந்தார்.

முன்னதாக ட்ரம்ப்புடனான விவாதத்தைத் தொடர்ந்து 81 வயதான பைடன் தனது பிரசாரத்தைத் தொடர்வாரா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
அதேநேரம் விவாதத்துக்கு பின்னர் வெளியிடப்பட்ட நியூயார்க் டைம்ஸ் கருத்துக் கணிப்பில், ட்ரம்ப் இப்போது ஆறு புள்ளிகளால் பைடனைக் காட்டிலும் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri