வெளிநாட்டு வேலை வாய்ப்பு! சுற்றிவளைப்பில் சிக்கிய பல கடவுச்சீட்டுகள்
தென்கொரியாவில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள நபர்களிடமிருந்து 275 கடவுச்சீட்டுகளைச் சேகரித்து தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி, கெட்டம்பே தங்கொல்ல வீதியில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரியாலயத்தை சுற்றிவளைத்த போதே, இந்த கடவுச்சீட்டுகள் மீட்கப்பட்டுள்ளன.
விசாரணை பிரிவு அதிகாரிகள் சுற்றிவளைப்பு

இந்த சுற்றிவளைப்பு தேடுதலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
இந்த காரியாலயத்துக்கு, ஏனைய நாடுகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்பி வைப்பதற்கான அனுமதி உள்ளது.
எனினும் தென்கொரியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான அனுமதி இல்லை என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan