யாழில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு(Photos)
யாழ்ப்பாணத்தில் சர்வதேச புலம்பெயர்வுக்கான அமைப்பின் அனுசரணையில் யாழ்.மாவட்டச் செயலகமும்,மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த தொழிற்சந்தையொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த தொழிற்சந்தையானது யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இன்று(19.08.2023) இடம்பெற்றுள்ளது.
இதில் 500க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்காக பல்வேறு நிறுவனங்கள் வேலைவாய்ப்பு தொழிற்சந்தையில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைசார் வேலைவாய்ப்பு
கணக்கியல் துறை, காப்புறுதித் துறை, சந்தைப்படுத்தல் துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஹோட்டல் துறை, கணினித்துறை பயிற்சிநெறி, தாதியர் பயிற்சிநெறி, ஆடைத்தொழிற்சாலை, பாதுகாப்புச் சேவை, தனியார் உற்பத்தி நிறுவனங்கள் ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் தொழிற்சந்தையில் கலந்துகொண்டு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளன.

யாழ்ப்பாணத்திலுள்ள வேலை வாய்ப்பற்ற இளையோருக்கு குறித்த தொழிற்சந்தை நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என யாழ். மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.











100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மகாநதி சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam