வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! இலட்சக்கணக்கில் சம்பளம்
வேலைவாய்ப்பினை எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்று வெளியாகியுள்ளது.
NVQ சான்றிதழ்
அதன்படி NVQ சான்றிதழ் என அழைக்கப்படும் தொழில்சார் தகைமை இன்றி கொரியாவில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பொருத்துதல் மற்றும் அரைத்தல் போன்ற தொழில்வாய்ப்புகளுக்கு குறித்த சான்றிதழ் அவசியமில்லை.
ஆரம்பகட்ட சம்பளம்
குறித்த தொழில்வாய்ப்புக்களுக்காக ஆரம்ப கட்ட சம்பளமாக எட்டரை இலட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.
கொரிய மொழியில் தேர்ச்சி இல்லாவிட்டாலும் குறித்த தொழில்களுக்காக விண்ணப்பிக்க முடியும்.
இதேவேளை, கொரியாவிற்கு தொழில்வாய்ப்புக்களுக்காக செல்வோருக்கு அரச வங்கிகளால் கடன் வழங்கும் திட்டம் ஒன்றும் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மணிவிழாவிற்கு மாலையுடன் உட்கார்ந்த குணசேகரனுக்கு விழுந்த பெரிய இடி.. கெத்து காட்டிய ஜனனி, எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
