இலங்கையின் முன்னேற்றம் குறித்து அமெரிக்கா பாராட்டு
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் இலங்கை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் வசந்த கால மாநாட்டிற்காக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க (Shehan Semasinghe) வோஷிங்டனுக்குச் (Washington) செல்வதற்கு முன்னதாக, அவரை சந்தித்தபோது இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் ( Julie Chung) இதனை தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன்
சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) திட்டத்தில் இலங்கை பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
இதன் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மை, வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் மக்களின் நலனை மேம்படுத்தும் நிதியுதவிக்கான இறுதி நடவடிக்கைகளை இலங்கை எடுக்க முடியும் என அமெரிக்கா நம்புவதாகவும் தூதுவர் கூறியுள்ளார்.