அரசியல் கட்சிகளுடனான விவாதத்திற்கு தயார் : பகிரங்க சவால் விடுத்த சஜித்
இலங்கை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் பகிரங்க விவாதத்துக்குத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - முத்தையன்கட்டு தமிழ்க் கலவன் பாடசாலையொன்றில் நேற்று (03.04.2024) நடைபெற்ற ஸ்மார்ட் வகுப்பறைக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நாட்டின் பிரச்சினைகள் குறித்து விவாதம் தேவை என தற்போது சமூகத்தில் பேசப்படுகின்றது. இத்தகையதொரு விவாதம் நடக்க வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக்கொள்கின்றோம்.
மக்கள் சேவை
விவாதங்களை நடத்துவது ஜனநாயக சமூகத்தின் உயர் பண்பு என்பதால் பொருளாதாரம், சமூகம், அரசியல், சர்வதேசம் என எந்தவொரு தலைப்பிலும் விவாதத்தில் ஈடுபட நாம் தயாராக இருகின்றோம்.
அதேபோல், விவாதம் புரிவதன் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் பெறுமானம் சேர்ப்பதாக அமைய வேண்டும்.
எதிர்க்கட்சியில் இருக்கும் காலத்தில் விவாதங்களுடன் மாத்திரம் மட்டுப்படாமல் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



















மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 11 மணி நேரம் முன்

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27: அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்..முதலிடத்தில் யார்? News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
